ஈரெழுத்து மடக்கு

மெய்வருக்கத்துள் இரண்டெழுத்துக்களே ஏனைய உயிர்க ளொடு சேர்ந்தும்தனித்தும் ஒரு பாடல் நிரம்ப வரும் மடக்கு.எ-டு : ‘மன்னுமான் மான்முன்ன மானமு மீனமாமின்னமா னேமுன்னு மானினி – மென்மெனமின்னுமா மென்னினா மன்னமுமா மென்மனனேமன்னுமான் மானுமான் மான்,’‘மன்னுமால் மால்; முன்னம் மானமும் ஈனமாம், இன்ன முன்னும் மான்சனிமென்மென நாம் மின்னும் ஆம் என்னின், அன்ன மும் ஆம்; மான் மானும்(-ஒக்கும்) மால் மான் என் மனனே மன்னும்’ – எனப் பிரித்துப் பொருள்செய்யப்படும்.“எனக்குக் காமமயக்கம் உண்டாகிறது; முன்பிருந்த பெருமை குறைகிறது.இத்தகைய யான் நினைக்கும் தலைவி இப்போது மின்னலைப் போல மெல்ல மறைவாள்எனினும், அன்னம் போன்ற நடை அழகையும் காட்டுகின்றாள். மானினை ஒத்தமருண்ட பார்வையுடையாளாகிய இப்பெண் என்மனத் துள்ளும் தங்கியுள்ளாள்”என்று பொருள் தரும் பாடற்கண், மகரமும் னகரமும் ஆகிய இருமெய்யெழுத்துக்களே தனித்தும் உயிரொடு கலந்து உயிர்மெய்யாயும்வந்துள்ளன. (தண்டி. 97 உரை)