ஈராசிடை வெண்பா

இருகுறள் நேரிசை வெண்பாவுள், முதற்குறட் பாவினொடு தனிச்சீர்இடைவேறுபட்டு விட்டிசைப்பின், ஒற்றுமைப் படாத உலோகங்களை ஒற்றுமைப்படப்பற்றாசு இடையிட்டு விளக்கினாற் போல முதற்குறட்பாவின் இறுதிக்கண்ஒன்றும் இரண்டும் அசை கூட்டி உச்சரிக்கப்பட்டு வருவது ஒருசார் ஆசிடைநேரிசை வெண்பா. இரண்டு அசை கூட்டி உச்சரிக்கப்படுவது ஈராசிடை நேரிசைவெண்பாவாம்.எ-டு : ‘வஞ்சியேன் என்றவன்தன் ஊருரைத்தான்; யானுமவன்வஞ்சியான் என்பதனால் வாய்நேர்ந்தேன்- வஞ்சியான்வஞ்சியேன் வஞ்சியேன் என்றுரைத்தும் வஞ்சித்தான்வஞ்சியாய் வஞ்சியார் கோ’இதன்கண், முதற்குறட்பா இறுதிக்கண் ‘வாய்’ என்பத னொடு, நேர்ந் தேன்- என ஈரசை கூட்டி உச்சரிக்கப்படுதலால் இஃது ஈராசிடை நேரிசைவெண்பாவாயிற்று. (யா. கா. 24 உரை)