ஈரந்தை

தோயன்‌ மாறன்‌ என்ற வள்ளலுக்குரியது ஈரந்தை எனத்‌ தெரிகிறது. கோனாட்டு எறிச்சலூர்‌ மாடலன்‌ மதுரைக்‌ குமரனார்‌ இவனைப்‌ பாடியுள்ளார்‌. ஈரம்‌ என்ற சொல்‌ நீர்ப்பற்று என்னும்‌ பொருளுடையது. நீர்ப்பற்று அமைந்த பகுதியில்‌ உள்ள ஊர்‌ இப்பெயர்‌ பெற்றிருக்கலாம்‌. ஈழத்தலரி என்பது அலரி வகையினுள்‌ ஒன்று. இச்செடிப்‌ பெயரோடு தொடர்புடையதாக இவ்வூர்ப்‌ பெயர்‌ அமைந்ததே எனவும்‌ ஆய்ந்து பார்க்கலாம்‌.
“ஈரந்தையோனே பாண்பசிப்‌ பகைஞன்‌”” (புறம்‌ 180:7)