‘ஈம்’ புணருமாறு

ஈம் – சுடுகாடு. ‘ஈம்’ நிலைமொழியாக, அல்வழிப் புணர்ச்சி யிலும்
வேற்றுமையின் குணவேற்றுமைப் புணர்ச்சியிலும், வருமொழி வன்கணம் வரின்
உகரமும் வல்லெழுத்தும் பெற்றும், மென்கணமும் இடைக்கணமும் வரின் உகர
மாத்திரம் பெற்றும் புணரும். வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக் கண் உகரம்
கெட இடையே அம்முச்சாரியை பெற்றுப் புணரும். இருவழியினும் உயிர்க்கணம்
வரின் இயல்பாகப் புணரும்.
எ-டு : ஈமுக் கடிது, ஈமு மாண்டது, ஈமு வலிது – அல்வழி; ஈமுக்
கடுமை, ஈமு மாட்சி, ஈமு வன்மை – வேற்றுமை யில் குணவேற்றுமைப்
புணர்ச்சி; ஈமக் குடம், ஈம நெருப்பு, ஈம விறகு – பொருட்புணர்ச்சி;
ஈமடைந்தது, ஈ மடைவு – இருவழியிலும் உயிர்க்கணம். (தொ. எ. 328, 329
நச்.)