இம்மூன்று சொல்லும் அல்வழி வேற்றுமை என்ற இருவழியும், முதனிலைத்
தொழிற்பெயர் போல, யகரம் அல்லாத மெய் வருமொழி முதலில் வரின், உகரச்
சாரியை பெற்றுப் புணரும்; ஈமும் கம்மும் வேற்றுமைக்கண் உகரச் சாரியையே
அன்றி அகரச் சாரியையும் பெறும்.
எ-டு : ஈமுக் கடிது, கம்முக் கடிது, உருமுக் கடிது – அல்வழி;
ஈமுக்கடுமை, கம்முக்கடுமை, உருமுக்கடுமை – வேற்றுமை; ஈமக்குடம்,
கம்மக்குடம் – வேற்றுமை (நன். 223)