ஈன் இவ்விடம் என்று பொருள்பெறும் ஏழாம் வேற்றுமை இடப்பொருள்
உணரநின்ற இடைச்சொல்லாம். இவ்விடைச் சொல் பெயர்த்தன்மை பெற்று
வருமொழியொடு புணர்வ தாம். வருமொழியில் வன்கணம் முதலெழுத்தாக வரின்,
ஈற்கொண்டான்-என்றாற்போல னகரம் றகரமாகத் திரிந்து புணரும்; ஈன்கொண்டான்
என்ற இயல்பு புணர்ச்சியுமுண்டு. (தொ. எ. 333 நச்.)