ஈகார ஈற்றுச் சிறப்பு விதிகள்

ஆ – என்ற சொல் முன் வரும் பீ என்ற ஈகார ஈற்றுச் சொல், ஈகாரம்
குறுகிப் பகரம் மிக்கு ஆப்பி – எனப் புணரும். இப் புணர்மொழிதான்
நிலைமொழியாக நிற்ப, நாற்கணம் வரினும், அல்வழிக்கண் இயல்பாக
முடியும்.
எ-டு : ஆப்பி +குளிரும், நன்று வலிது, அரிது = ஆப்பி குளிரும்,
ஆப்பி நன்று, ஆப்பி வலிது, ஆப்பி யரிது
பீ நீ மீ – என்பன அல்வழிக்கண் வன்கணம் வரின் இயல்பாகப் புணரும்.
எ-டு : பீகுறிது, சிறிது, தீது, பெரிது; நீ குறியை, சிறியை, தீயை,
பெரியை; மீகண், செவி, தலை புறம்.
மீ என்ற சொல்லுக்கு வல்லெழுத்து மிகுதலும் மெல்லெழுத்து
மிகுதலுமாகிய புணர்ச்சி ஒரோவழி உண்டு. எ-டு : மீக்கூற்று, மீந்தோல்
(நன். 178)