ஈகாரஈற்றுப் பெயர் வேற்றுமைக்கண் வன்கணம் வரின் மிகும்; பிற
கணங்கள் வரின் இயல்பாகப் புணரும்.
எ-டு : ஈக்கால், ஈச்சிறை, ஈத்தலை, ஈப்புறம்; ஈமாட்சி, ஈவன்மை,
ஈயாட்டம்,
வேற்றுமைப் பொருட்புணர்ச்சிக்கண் நீ என்ற முன்னிலைப் பெயர் நின்
எனத் திரிந்து வருமொழியோடு இயல்பாகப் புணரும். இரண்டாம் வேற்றுமைப்
பொருட்புணர்ச்சியில் நின் என்பது (வன்கணம் வருமிடத்து) நிற் எனத்
திரிந்து புணரும். உயிர்க்கணம் வரின் னகர ஒற்று இரட்டும்.
எ-டு : நின்கடமை, நின்நா(னா)டு, நின்யாழ், நின்னழகு, நிற்
புறங்காப்ப (தொ. எ. 252, 253 நச்.)