இல்லை கல் – என்ற வினைமுற்றுத் தொடரும், இல்லாததாகிய கல்- என்று
பொருள்படும் பண்புத்தொகையும் இல்கல் என்று முடியும். வினைமுற்றுத்
தொடராகியவழி, இல் கல் என்பதன் நிலைமொழி லகரஒற்றின்மேல் ஒலியூன்றிப்
பிரித்தொலிக்க. பண்புத்தொகை ஆகியவழி, ஒரு திரண்மையாக, விட் டிசைக்காது
ஒலிக்க. (தொ. எ. 373 இள. உரை)