எ-டு : சாத்தன்இல்லைக்கொடியன், சிறியன், தீயன், பெரியன்
(பொருள்:சாத்தன் கொடுமை சிறுமை தீமை பெருமை இல்லாதவன்)
இவன் கண்ணில் குருடன் (கண் இல்லாமையால் குருடன்).
இவன் பண்பில்லாச் சிறியன் (பண்பு இல்லாமையால் சிறியன்).
இவை பண்பு உணர்த்தின.
இல்லை கொடியன் – என மிகாது வரின், அது வினைக்குறிப்பு
முற்றாம்.
இல்லாக் கொற்றன் – என வலி மிகின், அஃது ஈறு கெட்ட எதிர்மறைக்
குறிப்புப் பெயரெச்சமாம்.
இல்லை என்னும் குறிப்புமுற்று, முன்னர் இருந்து பின்னர் இல்லாத
நிலையைக் குறிக்கும். எ-டு: வலி இல் குதிரை
இன்மை என்னும் பண்புப்பெயர் எப்பொழுதும் இல்லா மையை உணர்த்தும்.
எ-டு: கொம்பு இல் குதிரை
ஈண்டுக் கூறிய ‘இன்மை’ என்பது ‘பொருண்மை சுட்டல்’ ஆகிய உண்மை
என்னும் பண்புச்சொற்குரிய எதிர்மறைச் சொல்லாம். (தொ.எ.372 ச.பால.)