பாண்டியன் நன்மாறன் இங்கே இலவந்திகைப் பள்ளியில் இறந்ததாகத் தெரிகிறது. பாண்டியனுக்குரியதாகவும், பாண்டி நாட்டதாகவும். இவ்வூர் இருந்திருக்கவேண்டும் எனக் கருத இடம் உள்ளது. இலவந்திகை என்ற சொல் வாவிசூழ்ந்த பொழிலைக் குறிக்கும். பள்ளி நகரமாக அமைய பொழில் அமைந்த நகர மெனப் பெயர் பெற்றதெனக் கொள்ளலாம். பாண்டியன் இலவந்திகைப்பள்ளித் துஞ்சிய நன்மாறனைப் புறநானூற்றில் 55, 56, 57, 196, 198 ஆகிய பாடல்களில் புலவா் சிலர் பாடியுள்ளனர்.