இப்பெயரிலேயே இன்று செங்கற்பட்டு மாவட்டத்தைச் சார்ந்து அமைகிறது இவ்வூர். சம்பந்தர் பாடல் பெற்றது இத்தலம். இவ்வூர் பற்றிய விளக்கம் தெரியவில்லையாயினும், சிறப்பான, செழிப்புடையதொரு என்பதனைச் சம்பந்தர் பாடல்கள் நிறுவுகின்றன. ஊர் இது
பைம்பொழில் இலம்பையங் கோட்டூர் – 76-1
இருமலர்த் தண் பொய்கை யிலம்பையங் கோட்டூர் -76-2
ஏலநாறும் பொழில் இலம்பையங் கோட்டூர் 76-3
புனமெலா மருவிகளிருவி சேர்முத்தம்
பொன்னொடு மணிகொழித் தீண்டிலந்தெங்கும்
இனமெலா மடைகரை யிலம்பையங் கோட்டூர் – 76-7
பண்முரன்னு அஞ்சிறை வண்டினம் பாடும்
ஏருளார் பைம்பொழில் இலம்பையங் கோட்டூர் 76-7
இவற்றை நோக்க பொழில் சூழ்ந்த தொரு ஊர் என்பது தெளிவு படுகிறது. இச்செழிப்பை கொண்டு, இவ்வூர்ப் பெயரைக் காணின் இலம்பை என்பதற்குத் தரித்திரம், துயர நிலை எனப் பெயர் காணும்போது, அழகிய ஊருக்கு அடையாக இது அமையாது எனத் தோன்றுகிறது. மேலும் ஊருக்குப் பெயர் வைக்கும் போது சிறந்த பெயரை மக்கள் மனம் நாடுமே ஒழிய, துன்பம் தரும் சொற்களால் பெயர் வைப்பர் எதிர்பார்க்க இயலாதது. எனவே இலம் பயம் என்பது மற்றொரு பொருளைத் தருவதாகவே கொள்ளவேண்டியுள்ளது. இலவமலர் என்பதனின் இடைக்குறையாக இலமலர் எனக் காண்கின்றோம். ( இலமல ரன்ன வஞ்செந் நூலின் – அகநா-142 ) எனவே இலவம் இலம் என அமைய வாய்ப்பு அமைகிறது. இந்நிலையில் இலம் பயம் என்பது இலவம் பயன் தரும் அழகிய வளைந்த ஊர் என இவ் வூரைச் சிந்திக்க ஓரளவுக்குப் பொருத்த முறுகிறது. இன்றைய நிலையில் இவ்வூரைக் குறிக்கும் போது இது. திருவிற் கோலம் என்னும் கூவத்திற்குப் பக்கத்தில் உள்ளது. கூவம் ஏரிக்கரை வழியே சென்று இத்தலத்தை அடையலாம். செம்மையான வழி இல்லை என்று கூறும் கருத்துடன் இவ்வூர்ப் பெயர் பொருத்த அமைகிறது. ஆற்றங்கரையில் அமைந்த ஊராகையால் ஆறு வளைந்து செல்லும் நிலை காரணமாக ஊரும் வளைந்து காணப்படும் எனவே ஆறும். பொழில்களும் இப்பொருளையே இவ்வூர்ப் பெயருக்குரிய காரணங்களாகத் தருகின்றன.