‘இலம்படு’:புணர்நிலை முடிபு

இலம் + படு = இலம்படு. இலம் என்பது இன்மை என்னும்
பெயர்ப்பொருட்டாய் நின்றது. இலம் என்னும் தன்மைப் பன்மைக் குறிப்பு
வினைமுற்றுச்சொல் வேறு, இது வேறு. படுதல் – உண்டாதல், தோன்றுதல்,
உறுதல், அடைதல் – முதலாகப் பல பொருள்படும். இலம்படு (புலவர்)- வறுமைப்
பட்ட, வறுமைப்படும் (புலவர்).
இன்மையானது உற்ற – என அல்வழியாயும், இன்மையை உற்ற – என
வேற்றுமையாயும் இத்தொடர் பொருள் விரியும். (தொ. எ. 316 ச.பால.)