இலங்காதீவம்

இலங்கையே இலங்காதீவம்‌ எனக்‌ குறிக்கப்‌ பெற்றுள்ளது. இத்தீவு இந்தியாவிற்குத்‌ தெற்கில்‌ உள்ளது. தென்பகுதிலிருந்து பாக்‌ ஜலசந்தியால்‌ பிரிக்கப்படுகிறது. இலங்கையைத்‌ தமிழர்‌ ஈழம்‌ என்கின்றனர்‌. கிரேக்கர்களும்‌ ரோமானியர்களும்‌ தாப்ரோபானெ (தாமிரபரணி) என்று குறித்‌தனர்‌. போர்ச்சுகீஸியர்கள்‌ சிங்களம்‌ என்பதைச்‌ சைலோன்‌ என்‌றழைத்தனர்‌. இதிலிருந்து சிலோன்‌ என்ற தற்காலப்‌ பெயா்‌ வழங்கியது. இந்தியாவுடன்‌ நீங்காத தொடர்புடையது இலங்கை, இலங்கை மன்னன்‌ முதலாம்‌ கயவாகு சேரன்‌ செங்குட்டுவனைச்‌ சந்தித்துள்ளான்‌. ஈழநாட்டில் தான்‌ சிறந்த மணிகள்‌ கிடைத்தனவென்றும்‌, மணிகள்‌ கிடைத்த இவையே மணிமேகலை மணிபல்லவம்‌ என்று அழைத்ததாகவும்‌ தெரிகறது.
“இலங்காதீவத்துச்‌ சமனொளியென்னும்‌
சிலம்பினையெய்தி வலங்‌ கொண்டு மீளும்‌
தரும சாரணர்‌ தங்கிய குணத்தோர்‌” (மணிமே. 28: (07 109)