‘இறுதிமெய்’ என வீரசோழியம் குறிப்பது

18 மெய்யெழுத்துக்களுக்கும் 18 உயிர்மெய் வரிசை உண்டாதல்
வெளிப்படை. அவ்வுயிர்மெய் வரிசையில் அவ்வம் மெய் இறுதியில்
கொள்ளப்படும். எடுத்துக்காட்டாக, க கா கி கீ கு கூ கெ கே கை கொ கோ கௌ
க் – எனக் காண்க. ஏனைய மெய்களும் இவ்வாறே அவ்வவ் வுயிர்மெய் வரிசையில்
ஈற்றில் கொள்ளப்படும். உயிர்மெய் வரிசையில் மெய் இறுதியில் நிற்றல்
பற்றி ‘இறுதிமெய்’ எனப்பட்டது. (வீ.சோ. சந்திப்.2)