இரும்பூளை

பூளை பூக்களின் மிகுதியால் பெயர்பெற்ற இடம் இன்று தஞ்சாவூர் மாவட்டத்தைச் சார்ந்து அமையும் இவ்வூர் சம்பந்தர் பாடல் பெற்று அமைகிறது. சேக்கிழாரும் ( பெரிய 34 – 399 ) நாவுக்கரசரும் இவ்வூரைச் சுட்டுகின்றனர் ( 265 – 6 ). இன்று இவ்வூர் ஆலங்குடி என்று அழைக்கப்படுகிறது. பூளை ச் செடிகளுடன் ஆலமும் நிறைந்திருக்கலாம் என்ற நிலையில் பின்னர் ஆலங்குடி செல்வாக்கு பெற்று திகழ்ந்திருக்கலாம் அல்லது இறையிருந்த கோயில் இரும்பூளை என வழங்கப்பட்டு மக்கள் வசித்த பகுதி ஆலங்குடி என்றே வழங்கப்பட் டிருத்தலும் கூடும். புராணக் கதையும் தொடர்பாக அமைகிறது. கிழக்கே பூளைவள ஆறு உள்ளது என்ற நிலையில் ஆற்றின் பெயரும் பூளை பூக்கள் மிகுதியை இயம்புகிறது.