இரும்புதல்

தமது திருத்தாண்டகம் திருநாவுக்கரசர், இரும்புதலார் இரும்பூளையுள்ளார் என இறைவன் உறையுமிடம் சுட்டுகின்றார். இரும்புதல் என்ற தலம் பற்றி தனது ஆய்வில், இரும்புதல் என்பது தஞ்சாவூர் ஜில்லா பாவநாசந் தாலுக்காவில் இரும்புதலை எனவழங்கும் ஊரே என்பது அவ்வூர்ச் சிவாலய லயத்தே முதல் இராஜராஜ சோழன் முதலியோர் காலத்து அமைந்த சாஸனங்களிலே,
மனுகுல சூளாமணிச் சதுர்வேதி மங்கலத்துத்
திரு விரும்புதலுடைய மஹாதேவர்
எனவருந் தொடரால் தெளிவாகின்றது என்று எழுதிச் செல்கின்றார் இராகவையங்கார்.. இரும்புதல் என்ற சொல்லை நோக்க, அடர்ந்த புதற்பகுதியாக இருந்தவிடம், அங்கு சிவன் கோயில் அமைய, குடியிருப்பாக மாறியிருக்கலாம் எனத் தோன்றுகிறது.