வட ஆற்காடு மாவட்டம் வந்தவாசி வட்டத்திலும், தென் ஆற்காடு
மாவட்டம் செஞ்சி வட்டத்திலும், செங்கற்பட்டு மாவட்டம் செங்கற்பட்டு
வட்டத்திலும், மதுராந்தகம் வட்டத்திலும், கன்னியாகுமரி மாவட்டம் கல்குளம்
வட்டத்திலும் இவ்வூர்ப்பெயர் இருப்பதை அறியமுடிகிறது. சுவடியில் “தென் ஆற்காடு ஜில்லா செஞ்சி
தாலுகாவைச் சேர்ந்த இரும்பிலி கிராமம்” (1277-சா) என்றிருப்பதைக்
காணும்போது, இங்குக் குறிப்பிட்ட ஊர் செஞ்சி வட்டத்தைச் சேர்ந்ததென்பது வௌ¢ளிடை.