இருப்பை

நற்றிணை, ஐங்குறு நூறு ஆகிய சங்க இலக்கியங்கள்‌ மூலம்‌ நாம்‌ அறியும்‌ ஊர்பெயர்களுள்‌. ஒன்று இருப்பை என்பது, இலுப்பை மரங்கள்‌ அடர்ந்த பகுதியில்‌,அமைந்த குடியிருப்பு ஊரா இருப்பை எனப்‌ பெயர்‌ பெற்றிருக்கும்‌. அகப்பொருள்‌ பற்றிக்‌ கூறும்‌ அந்த இலக்கியங்களில்‌ தலைவியின்‌ நலத்திற்கு உவமையாகவே இந்த ஊர்ப்பெயர்‌ இடம்‌ பெற்றுள்ளது. விராஅன்‌ என்ற வள்ளலுக்குரியது இருப்பை எனத்தெரிகிறது.
“தெவ்வர்த்‌ தேய்த்த செவ்வேல்‌ வயவன்‌
மலிபுனல்‌ வாயில்‌ இருப்பை அன்ன..என்‌
ஒலி பல்‌ கூந்தல்‌ நலம்‌ பெறப்‌ புனைந்த.” (நற்‌. 260;6 8)
“விண்டு அன்ன வெண்ணெற்‌ போர்வின்‌
கைவண்‌ விராஅன்‌, இருப்பை அன்ன
இவள்‌ அணங்‌ குற்றனை போறி”?, (ஐங்‌. 58: 1 3)