இவ்விடம் இருப்பு என்ற பொருளில் வழங்கியிருக்கிறது.
மதுரை மாவட்டத்திலிருக்கும் வாடிப்பட்டி ஊராட்சி ஒன்றியத்திலுள்ள ஒரு ஊர் பெயர் கச்சிராயிருப்பு.
ஊர்களைக் குறித்திடும் “இருக்கை” என்ற வடிவம் 11 ஆம் நூற்றாண்டில் வழக்கில் இருந்திருக்கிறது. கரை இருக்கை, காஞை இருக்கை போன்ற ஊர்கள் அக்காலத்தில் இருந்திருக்கின்றன. இவ்வடிவமே இருப்பு என்று ஆகியிருக்கலாம்.
இதைத் தவிர குடியிருப்பு என்ற ஒரு கூட்டு வடிவமும் வழங்கி வருகின்றது. குடி, இருப்பு எனும் ஒரே பொருளைத்தரும் இரு சொற்கள் இணைந்த ஒரு பொருட் பன்மொழி குடியிருப்பு ஆகும். குடிகளின் இருப்பிடம் என்றும் இதற்குப் பொருள் கொள்ளலாம். காலனி (Colony) என்ற ஆங்கிலச் சொல்லின் தமிழாக்கமாகவும் இவ்வடிவம் வழங்குகின்றது.
எடு: பூலாங்குடியிருப்பு
(திருநெல்வேலி மாவட்டத்தில் இருக்கும் செங்கோட்டை (நகரம்) அருகில் உள்ள ஒரு ஊர் பெயர் பூலாங்குடியிருப்பு)