இருந்தையூர்‌

இறைவன்‌ அடியார்களுக்குக்‌ காட்சி அளிக்கும்‌ திருக்கோலங்‌களால்‌ சில ஊர்கள்‌ பெயா்‌ பெற்றுள்ளன. சென்னைக்கும்‌ அரக்கோணத்திற்கும்‌ இடையில்‌ “நின்றவூர்‌” என்னும்‌ ஊர்‌ உள்ளது. அங்கு திருமால்‌ நின்ற கோலத்தில்‌ காட்சி அளிக்கின்றார்‌. அதனால்‌ அவ்வூர்‌ நின்றவூர்‌ எனப்‌ பெயா்‌ பெற்றது, பாண்டிநாட்டில்‌ வைகைக்‌ கரையில்‌ திருமால்‌ இருந்தருளும்‌ கோலத்தைப்‌ பரிபாடல்‌ கூறுகிறது. இவ்வாறு காட்சியளித்த இடம்‌ “இருந்தவளம்‌” எனப்பெற்றது. சிலப்பதிகாரத்தில்‌ துன்பமாலையில்‌ (அடி, 2 5) மாதரி குரவைக்‌ கூத்து ஆடிய பின்னா்‌ வையைக்‌ கரையிலிருந்த நெடுமாலின்‌ கோவிலுக்கு வழிபடச்‌ சென்றதாகக்‌ கூறப்படுகிறது. “வையை நெடுமால்‌ ஸ்ரீ இருந்தவளம்‌ உடையார்‌” என்று அரும்பத உரையாசிரியர்‌ குறித்துள்ளார்‌. இருந்தவளம்‌ என்பதன்‌ குறுக்கமே இருந்தையென்பது. பரி பாடலில்‌ இடம்பெற்ற ஊரும்‌ இதுவே. பின்னர்‌ நாளடைவில்‌ இருந்தையூர்‌ ஆகியிருக்க வேண்டும்‌, மாதரி வையைக்‌ கரையிலிருந்த நெடுமாலை வழிபடச்‌ சென்றதாகக்‌ கூறப்பட்டுள்ளதால்‌, அந்நெடுமால்‌ கோவில்‌ மதுரைக்கு அண்மையில்‌ இருந்ததாக வேண்டும்‌. திருமால்‌ கிடந்த கோலத்தில்‌ காட்சி அளிக்கும்‌ கோயிலாகக்‌ கூடலழகர்‌ கோயில்‌ இன்றைய மதுரையில்‌ இருக்கிறது. மதுரையில்‌ தெற்கு மாசி வீதியும்‌ மேலை மா? வீதியும்‌ கூடுகின்ற இடத்‌திற்கு அருகில்‌ கூடல்‌ அழகர்‌ கோயில்‌ இருக்கிறது. ஆகவே அந்தப்பகுதியே ‘பரிபாடலில்‌ கூறப்பெற்ற இருந்தையூர்‌ எனக்‌ கருத வேண்டியுள்ளது. இன்று இவ்வூர்ப்பெயர்‌ மறைந்து, தற்‌கால மதுரையில்‌ ஒரு பகுதியாகவே திகழ்கிறது. இருந்தையூரில்‌ கொற்றன்‌ என்ற சங்ககாலப்‌ புலவர்‌ ஒருவர்‌ இருந்துள்ளார்‌. அவர்‌ இருந்தையூர்க்‌ கொற்றன்‌ எனப்பெற்றார்‌. குறுந்தொகை 335 ஆம்‌ பாடல்‌ அவா்‌ பாடியது. தென்‌ ஆர்காடு மாவட்டம்‌ திருக்‌ கோவலூர்‌ வட்டத்திலும்‌ இன்று இருந்தை என்று ஓர்‌ ஊர்‌ உள்ளது.
“மருந்தரடும்‌ இம்நீர்‌ மவிதுறைமேய
இருந்தையூர்‌ அமர்ந்த செல்வ”. (பரி. திரட்டு 1:4 5)
“ஆயர்‌ முதுமக ளாடிய சாயலாள்‌
பூவும்‌ புகையும்‌ புனைசாந்துங்‌ கண்ணியும்‌
நீடுநீர்‌ வையை நெடுமா லடியேத்தத்‌
துரவித்‌ துறைபடி.யப்‌ போயினாள்‌” (சிலப்‌. 1812 5)