திருக்கிளர் சீர் மாடங்கள் திருந்து பெருங்குடி நெருங்கிப்
பெருக்கு வடவெள்ளாற்றுத் தென் கரைப்பால் பிறங்கு பொழில்
வருக்கை நெடுஞ்சுளை பொழிதேன் மடு நிறைத்து வயல் விளைக்கும்
இருக்கு வேளூர் என்பது இவ்வுலகில் விளங்குபதி
பெரிய புராணம் கணம்புல்ல நாயனாரின் ஊர்பற்றிய விளக்கத்தை அளிக்கிறது ( பா.1). வெள்ளாற்றின் தென்கரையில் அமைந்த ஊர் என்பது இப்பாடலில் விளக்கம் பெறுகிறது. பெருங்குடிகள் கெழுமிய ஊர் என்ற நிலையில் பழமை பொருந்திய ஊர் எனவும் கொள்ளலாம்.