மகத நாட்டின் தலைநகர். இராசகரி எனவும் இது வழங்கும். புகழ்பெற்ற மிகப்பழமையானதொரு நகரம். பலவகை நுகர்ச்சி களையுடையமையாலும் அச்சத்தை விளைவித்தலாலும் பவண லோகத்தையும், செல்வ மிகுதியால் அமராவதியையும் ஒப்பது. இதன் புறத்தே யவனச் சேரிகள் நூறும், எறிபடைப்பாடிகள் நூற்று அறுபதும், தமிழ் வீரார்களின் சேரிகள் ஆயிரமும்,கொல்லர் சேரிகள் பலவும், மிழலைச் சேரிகள் பலவும் இருந்தன. உதயணன் சிலநாள் இங்கே துங்கி இருந்தான்.
“அமராபதியும் நிகர்தனக்கின் றித்
துன்ப நீக்குந் தொழிலிற்றாகி
இன்பங்கலந்த இராசகிரியம்” (பெருங்,3:3:112 114)