‘இயல்பின் விகாரமும் விகாரத்து இயல்பும்’

‘நின்’ என்பதன் ஈறு பெரும்பான்மையும் இயல்பாம் (நன்.218) என்ற
விதிப்படி இயல்பாகாது இரண்டாம் வேற்றுமைத் தொகையில் றகரமாகத்
திரியும்.
எ-டு :
‘வழிபடு தெய்வம் நிற்புறங்
காப்ப’
(தொல். செய்.
106)
ணகரஈறு வேற்றுமைப் புணர்ச்சியில் டகரமாகத்திரியும் (நன். 209) என்ற
பொதுவிதிப்படி திரியாது இரண்டாம் வேற்றுமைத் தொகையில் இயல்பாம். (நன்.
255 சங்கர.)
எ-டு : மண் கொணர்ந்தான்