இடையாறு என்னும் இவ்வூர் தென் ஆர்க்காடு மாவட்டத்தில் திருக்கோயிலரர் வட்டத்தில் உள்ளது. இப்பொழுது இடையார் என வழங்கப் பெறுகிறது. ஊர் அமைப்பால் இடை என்ற அடைமொழியுடன் வழங்கும் ஊர்ப்பெயர்களில் இடையாறு என்ப தும் ஒன்று. கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டைச்சேர்ந்த பராந்தக வீரநாராயணனின் தளவாய்ப்புரச் செப்பேட்டிலும் “இடையாறு” என்றே வழங்கி வந்துள்ளது. இதற்கும் பிற்காலத்தில் தான் இடையார் என வழங்க ஆரம்பித்திருக்க வேண்டும்.
“செல்குடி நிறுத்த பெரும்பெயர்க் கரிகால்
வெல்போர்ச் சோழன் இடையாற்று அன்ன
நல் இசை வெறுக்கை தருமார்…” (அகம், 141722 24)