இடைமருதூர்

திருவிடை மருதூர் எனச் சுட்டப்படும் இவ்வூர், இன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது. சம்பந்தர், அப்பர், சுந்தரர் மூவராலும் தேவாரம் பாடப்பட்ட சிறப்புடையது. மருதமரங்கள் காரணமாகப் பெயர் பெற்ற ஊர். இக்கோயில் தலமரமும் மருதமரமே. ஸ்ரீசைலம் – மல்லிகார் ஜூனம். நெல்லை மாவட்டத்தில் அம்பாசமுத்திரத்திலிருந்து 5 கி.மீ தொலைவில் உள்ள தாமிரவருணி ஆற்றங்கரையில் திருப்புடார்ஜீனம் உள்ளது. மத்திய அர்ஜீனம் இடைமருது என்ற எண்ணத் துடன், சிவபெருமானுடன் இத்தலத்தின் தொடர்பு பற்றிய எண்ணம் மேலும் பிறவும் அமைகின்றன. இவ்வெண்ணங் களை நோக்க, மருத மரம் அடிப்படையில் பெயர் பெற்ற ஊர் பல இருந்தமையும் அவற்றைக் குறிப்பிட்டுக் காட்டும் பொருட்டு அவற்றை இடம் நோக்கி குறித்தனர் என்பதும் புலனாகும். மேலும் மருதூர் என்றே முதலில் வழங்கிய பெயர் பின்னர் மேலும் விளக்கத்திற்காக அடைசேர்க்கப்பட்டு இடை மருதூர் என்று ஆகி, பின்னர் தலச்சிறப்பு காரணமாக திருவிடை மருதூர் என்றாயிற்று என்பதும் தெள்ளிதின் விளங்கும். இன்றும் ஊரைச் சுற்றிலும் மருத மரங்கள் சூழப்பெற்ற இயற்கை அமைப்பினையுடையது என்ற எண்ணம் அங்கு மருத மரச் செழிப்பை உணர வல்லதாக அமைகிறது. காவிரியின் தென்கரைத் தலமாகிய இவ்வூரை இன்று திருவிடமருதூர் என் ரயில்வே காரர்கள் குறித்திருப்பதை நோக்க, இப்பெயர் இன்று வழங்கும் வழக்கு புரிகிறது. மக்கள் எளிமை கருதி திருவிடை மருதூர் என்பதற்குப் பதில் திருவிடமருதூர் என்று சுட்டும் நிலையே இதற்குக் காரணமாகும். 1.சேக்கிழார் வழியில் சிவத்தலங்கள் – பக் -42 4. 2. சிவ பெருமானுக்கு விருப்பமான மருத மரத்துடன் கூடிய மூன்று தலங்கள் தென்னாட்டில் உள்ளன என்றும், அனவ வடக்கே சிருட்டிணை ஆற்றின் கரையில் இருப்பது “ஸ்ரீமல்லிகார்ச்சுனம் தெற்கே தாமிரபருணி ஆற்றின் கரையில் உள்ள திருப்புடை மருதூர்” ( புடார்ச்சனம் ) அம்பா சமுத்திரத்தின் அருகேயுள்ளது. இவ்விரண்டின் இடையில் இருப்பதால், இடைமருதூர் எனப்பட்டு திரு எனும் அடைமொழி சேர்க்கப்பட்டு இப்பெயர் பெற்றது.தஞ்சாவூர் மாவட்ட ஊர்ப்பெயர்கள் – பக் -47 மருதமலர்கள் நிறைந்த சோலை நடுவே இறைவன் தோன்றி உரோமச முனிவருக்கு ஜோதிர்லிங்கமாகக் காட்சி கொடுத்ததால் இடைமருதூர் எனப்பெயர் பெற்றது என்பர். வேங்கடம் முதல் பொன்னியின் கரையிலே பக் -263 குமரி — 3. தஞ்சாவூர் மாவட்ட ஊர்ப்பெயர்கள் – பக்.47,48. அரசியல் நிலையில் இவ்வூருக்கு வீரசோழபுரம் என்ற பெயர் இருந்தது எனத் தெரிகிறது எனினும் இன்றில்லை. மாசில் வீணை மாலைமதியம் போன்றவற்றின் தன்மையை ஒத்தது ஈசன் எந்தை இணையடி நீழல் என்று பாடிய அப்பர், அவன் எவ்வாறு இனிமையுடையவன் என்பதையும்,
கனியினும் கட்டிப்பட்ட கரும்பினும்
பனிமலர் குழல் பாவை நல்லாரினும்
தனிமுடி கவித்து ஆழும் அரசினும்
இனியன் தன் அடைந்தார்க்கு இடைமருதன்
எனப்பாடும் முறை இவ்விறைச் சிறப்பை யுணர்த்தவல்லது. காவிரியின் அருகில் இருக்கும் நிலையை,
எறிபுனல் பொன் மணி சிதறும் திரை நீர்ப்பொன்னி
இடைமருதைச் சென்றெய்தி என்ற சேக்கிழார் வாக்கு (திருஞா 192) உணர்த்துகிறது. திருவிடை மருதூர் மணிக் கோவையில் பட்டினத்தார் இவ்விறைச் சிறப்பைத் தருகின்றார் (பதினோராய் -28 ). மருதிடம் கொண்ட ஒரு தனிக் கடவுளாக இவர் அமைவதை இயம்புகின்றார் ( 70 ). கருவூர்த் தேவர் பாடலும் இதற்கு உண்டு. பல சிற்றிலக்கியங்களும் இக்கோயிற் தொடர்பாக எழுந்துள்ளன. அனைத்தும் இவ்விறைச் சிறப்புடன், ஊர்ச் சிறப்பையும் இயம்ப வல்லனவாக அமைகின்றன. இச்செல்வாக்கினை. அரசர்களும் பல பணிகள் செய்திருப்பதன் மூலம் தெரிய வருகின்றோம்,