‘இடைச்சொல் எல்லாம் வேற்றுமைச்சொல்லே’ : பொருள்

முடிக்கும் சொல்லை விசேடித்து வரும் சொற்களெல்லாம், முடிக்கப்படும்சொற்கும் முடிக்கும் சொற்கும் நடுவே வரும். வேற்றுமைச்சொல்லாவதுவேறுபாட்டினைச் செய்யும் சொல்.எழுவாய்க்கும் அதனை முடிக்கும் பயனிலைக்கும், முற்றுக்கும் அதனைமுடிக்கும் பெயருக்கும், வினையெச்சத்திற்கும் அதனை முடிக்கும்வினைக்கும், பெயரெச்சத்திற்கும் அதனை முடிக்கும் பெயருக்கும் இடையேவருதலின் இடைச்சொல் எனப்பட்டன.எ-டு : ‘கண்ணி கார்நறுங் கொன்றை’ (புற. 1) – (முடிக்கப்படும் சொல்) பெயர்‘ஈர்ந்தை யோனே பாண்பசிப் பகைஞன்’ (புற. 180) – முற்று‘ஈயப்பெற்று, நிலம்கல னாக இலங் குபலி மிசையும்’ (புற.363); ‘மடுப்பத் தேம்பாய் தேறல் நீ சிறிது உணினே ’ – வினையெச்சம்‘பொலிந்த கொய்சுவல் புரவி’ (அக.4) – பெயரெச்சம்- என இடைநின்ற சொற்கள் முடிக்கும் சொற்களை விசேடித் தவாறு.(தொ.சொ.455 நச். உரை)