என்ற திருவிடைச்சுரம் என வழங்கப்படும் இவ்வூர் இன்று செங்கற்பட்டு மாவட்டத்தைச் சார்ந்து அமைகிறது. காட்டின் இடையில் அமைந்த கோயில் காரணமாகக் கோயில் இடைச்சுரமெனப் பெயர் பெற்று, ஊரும் இப்பெயர் அடைந்ததோ என்ற எண்ணம்,
வரிவளரவிரொளி யரவரதாழ வார்சடை முடிமிசை வளர் மதிசூடிக்
கரிவளர் தருகழல் கால்வவனேந்திக் கனலெரியாடுவர் காடரங்காக
விரிவளர் தருபொழி லிள மயிலால வெண்ணிறத் தருவிகடி ண்ணென வீழும்
எரிவளரினமணி புனமணி சார லிடைச் சுரமேவிய
விவர் வணமென்னே – திருஞா- 78-1
போன்ற இவரது பாடலைக் காண ஏற்படுகிறது. அரங்கமாகக் காட்டைக் கொண்டிருந்தவர் என்பது இப்பெயர்க் காரணத்தை யுணர்த்தும் நிலையில் அமைகிறது. சேக்கிழாரும் இவ்வூரைப் பற்றிக் குறிப்பிடுகின்றார் ( பெரிய 34–1125, 1126 ).
தெள்ளாறும் வளைகுளமும் தளிக்குளமு நல்
லிடைக் குளமுந் திருக்குளத்தோ டஞ்சைக் களம்
விள்ளாத நெடுங்களம் வேட்கள நெல்லிக்கா
கோலக்கா வானைக்கா வியன் கோடிகா
கள்ளார்ந்த கொற்றையானின் றவாறுங்
குளங்களங்காவென அனைத்தும் கூறுவோமே.