இடைக்குளம்

எனவே சிவன் கோயில் கொண்ட ஆறு, குளம், களம், கா பெயர் கள் இடம்பெற்ற பெயர்களுள் ஒன்றாக இதனைத் திருநாவுக் கரசர் குறிப்பிடுகின்றார் ( 285-10 ) நடுவில் அமைந்த குளம் என்ற நிலையில், ஏற்பட்ட பெயராக அமையலாம். பின்னர் இவ்விடத்தில் கோயில் ஏற்பட்டு இருக்கலாம். இடைக்குளம் என்பது தஞ்சாவூர் ஜில்லா கும்பகோணம் தாலுகாவில் உள்ள மருத்துவக்குடி என்பதாகும். எண்ணத்தை இராக வையங்கார் தருகின்றார்.