இடைக்காடு

இவ்வூரைச்‌ சார்ந்தவரான ஒரு சங்கப்‌ புலவர்‌ இடைக்‌ காடனார்‌ எனப்‌ பெற்றார்‌. ஊர்‌ அமைப்பு முறையில்‌ “இடை” என்னும்‌ அடைமொழியுடன்‌ அமைந்த ஊர்ப்பெயர்‌ இடைக்காடு. தஞ்சாவூர்‌ மாவட்டம்‌ பட்டுக்கோட்டை வட்டத்தில்‌ இடைக்‌காடு என்று ஓர்‌ ஊர்‌ உள்ளது. இடைக்காடு என்ற ஊர்‌ மலையாளப் பகுதியைச்‌ சார்ந்தது என்ற, கருத்தும்‌ உள்ளது. நற்றிணையில்‌ 142, 221, 316 ஆகிய பாடல்களும்‌, குறுந்‌ தொகையில்‌ 251 ஆம்‌ பாடலும்‌, அகநானூற்றில்‌ 139, 194, 274, 284, 304, 374 ஆகிய பாடல்களும்‌, புறநானூற்றில்‌ 42ஆம்‌ பாடலும்‌ இவ்வூர்ப்‌ புலவர்‌ பாடியவை.