இடைக்கழிநாடு

ஓய்மான்‌ நாட்டு நல்லியக்‌ கோடன்‌ மீது சிறுபாணாற்றுப்‌ படை என்னும்‌ நூலை இடைக்கழிநாட்டு நல்‌லூர்‌ நத்தத்தனார்‌ பாடியுள்ளார்‌. இடைக்கழிநாடு இப்போது எடக்குநாடு என்று வழங்கப்‌ பெறுகிறது.இடைக்கழிநாடு என்பதன் திரிபே எடக்குநாடு என்பது.இந்த இடைக்கழிநாடாகிய எடக்குநாடு செங்கற்பட்டு மாவட்டத்‌தில்‌ மதுராந்தகம்‌ வட்டத்தில்‌ இருந்தது. இந்த எடக்கு (இடைக்‌ கழி) நாட்டிலே இப்போதும்‌ நல்லூர்‌ என்னும்‌ சிற்றூர்‌ ஒன்று இருக்கிறது. நத்தத்தனார்‌ என்ற புலவர்‌ இந்த இடைக்கழி நாட்டு நல்லூரிலே வாழ்ந்தவராதல்‌ வேண்டும்‌. நல்லியக்‌ கோடனுடைய ஓய்மாநாடு இடைக்கழிநாட்டுக்கு அண்மையில்‌ தெற்குப்‌ பக்கத்தில்‌ இருந்தது. இடைக்கழி நாடு செய்யூருக்குக்‌ கிழக்கிலும்‌ தென்கிழக்கலும்‌ தெற்கிலும்‌ கடற்கரையோரத்தில்‌ பரவியுள்ளது. இந்‌நாட்டின்‌ இடையில்‌ கழிவெளிகள்‌ நீண்டு கடக்கின்றன. இதுபற்றியே இந்‌நாடு இடைக்கழிதாடு எனப்‌ பெயர்‌ பெற்றது போலும்‌.