இன்று வரை இப்பெயரிலேயே வழங்கப்படும் இவ்வூர் தஞ்சாவூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது. ஞானசம்பந்தர் பாடல் பெற்ற இவ்வூர் சேக்கிழாராலும் ( 34-623 ) சுட்டப்படு இடும்பன் வழிபட்ட தலம் என்பது எண்ணம். காரைக்குடி மயிலாடுதுறை இருப்புப்பாதையில் கடிகுளத்திற்குப் பக்கத்கிறது. தில் இன்று இருப்பதாகத் தெரியவரும் இவ்வூர் அன்று மலைக் குன்றில் மேல் அமர்ந்த கோயிலை மட்டும் சுட்டி இன்று பக்கத்தில் உள்ள இடத்தையும் குறிக்கும் நிலைக்குச் செல்வாக்குப் பெற்றிருக்குமோ என்ற எண்ணம், ஞானசம்பந்தர் தம் பதிக்கத்தின் பல பாடல்களில் குன்றில் மேல் இடும்பாவனம் எனப் பாடும் நிலையால் எழும்புகின்றது.
சினமார் தரு திறல் வாளெயிற் றரக்கன் மிகு குன்றில்
இனமாதவ ரிறைவர்க்கிட மிடும்பாவனமிதுவே 17-1
கலையார் தரு புலவோரவர் காலன் மிகு குன்றில்
இலையார் தரு பொழில் சூழ்தரு மிடும்பாவனமிதுவே 17-2
கொந்தார் மலர் புன்னை மகிழ் குரவங்கமழ் குன்றில்
எழிலார் தரு மிறைவர்க் கிடம் இடும்பாவனமே 18- 5
இடும்பன் – முருகனின் கணத்தலைவன் என்ற பொருளைக் காண்கின்றோம். இடும்பாவன வனம் + இடும்பன் வனம் அல்லது இடும்பு வனம் என்ற நிலையில் ணைந்தது. இடும்பு என்பதற் குரிய பொருட்கள் இவண் பொருத்தமாகவில்லை. இறைச் சிறந்த காரணமாக. பக்திக் கதை அடிப்படையில் இவ்வனம் பெயர் பெற்றிருக்கலாம் எனத் தோன்றுகிறது.