ஆண் பெண் – முதலிய இடுகுறிப் பெயரும், அவன் இவன் – முதலிய காரணப்பெயரும் இடையே ஒருவரான் ஆக்கப் பட்டனவன்றி அவ்விலக்கணங்களொடு தோன்றியபொருள் களுக்கெல்லாம் தொன்றுதொட்டு மரபு பற்றி வருதலானும், ‘முட்டை’என்றல் தொடக்கத்து இடுகுறிப்பெயரும், ‘பொன்- னன்’ என்றல் தொடக்கத்துக்காரணப்பெயரும் மரபு போலத் தொன்றுதொட்டன அன்றி அப்பொருள்களுக்கு இடையேஒருவரான் ஆக்கப்பட்டு வருதலானும், இடுகுறி காரணம் இரண்டும் ‘மரபையும்ஆக்கத்தையும் தொடர்ந்து’ என்றார். இதற்கு இவ்வாறன்றி, இடுகுறிப் பெயர்காரணப் பெயர் இரண்டும் ஒழிய, மரபுப்பெயர் – தெங்கு கடு என்னும் ஆகுபெயர் – எனப் பொருள்கொள்வாரு முளர். எல்லாப் பொரு ளும் இடுகுறிப்பெயர்காரணப்பெயர் என்னும் இரண்டாய் அடங்குவதன்றி வேறின்மையானும், ‘இடுகுறிகாரணப் பொதுபெயர் சிறப்பின’ பெயர் (62) என வரையறை கூறிப் போந்தமையானும் அது பொருந்தாது என்க. (நன். 275 சங்.)