நாகநல்நாடு நானூறு யோசனை பாதலத்து வீழ்ந்து கேடு எய்தும் இதன்பால் ஒழிக என அத்திபதியிடம் பிரமதரும முனிவர் கூறியதும், அவன் ‘இடவயம்’ என்ற பதிநீங்கதி வடக்கே அவந்தி நகர்ச் சென்றான் என்று மணிமேகலை கூறுவதால்; இட வயம், என்னும் ஊர் நாக நாட்டகத்தது என உணரலாம்,
“அத்திபதி எனும் அரசாள் வேந்தன்
மைத்துனன் ஆகிய பிரமதருமன்
ஆங்கு அவன் தன்பால் அணைந்து அறன் உரைப்போய்..
தீம்கனி நாவல் ஓங்குமித் தீவிடை
இன்று ஏழ்நாளில் இருநிலமாக்கள்
நின்று நடுக்கெய்த நீள்நில வேந்தே
பூமி நடுக்குறூஉம் போழ்தத்து, இந்நகர்
வியன் பாதலத்து வீழ்ந்து கேடு எய்தும்
இதன்பால் ஒழிக என இருநில வேந்தனும்
மாபெரும் பேரூர் மக்கட்கு எல்லாம்
ஆவும் மாவும் கொண்டு ஒழிக என்றே
பறையின் சாற்றி, நிறை அருந் தானையோடு
இடவயம் என்னும் இரும்பதி நீங்கி
வடவயின் அவந்தி மாநகர்ச் செல்வோன்” (மணிமே. 9: 14 28)