இலக்கணக்கொத்து எடுத்துரைக்கும் பகுபத வகைகளில் இவையும் சில.இடப்பொருளை உணர்த்தும் வினாவும் சுட்டும் எண்ணும் என இவை பெற்றனபகுபதமாகியும் இடைச்சொல்லாகவே நிற்பன.1. யாண்டு யாங்கு எங்கு எங்கண் எவண் யாவண் எங்ஙனம் யாங்ஙனம் -வினாவான இவை இடப்பொருளை யுணர்த்தும் பகுபதமாம் இடைச்சொற்கள்.2. ஆன ஈன அங்கு இங்கு உங்கு ஆங்கு ஈங்கு ஊங்கு அவண் இவண் உவண்அம்பர் இம்பர் உம்பர் அங்ஙனம் இங்ஙனம் உங்ஙனம் – சுட்டான இவைஇடப்பொருளை யுணர்த்தும் பகுபதமாம் இடைச்சொற்கள்.3. ஒருவயின் இருவயின் மூவயின் எண்வயின் – இவை எண் பெற்றுஇடப்பொருளை உணர்த்தும் பகுபதமான இடைச் சொற்கள். (இ. கொ. 117)