‘இடனுடைத்து’ என்றது, ‘இத்திரிபு பெரும்பான்மை அன்று; ஒரோவழியே
வரும்’ என்ற பொருளது. இதனைக் காணலாம் இடங்கள் சில:
‘ஆன்ஒற்று அகரமொடு நிலைஇடன் உடைத்தே’
– தொ. எ. 232 நச்.
‘ழகர உகரம் நீடுஇடன் உடைத்தே’
– தொ. எ. 261 நச்.
‘வெரிந்என் இறுதி முழுதும் கெடுவழி
வரும்இடன் உடைத்தே மெல்லெழுத் தியற்கை’
– தொ. எ. 300 நச்.
‘இகர இறுபெயர் திரிபுஇடன் உடைத்தே’
– தொ. எ. 154 நச்.
(எ. ஆ. பக். 117).