‘இகர உகரத்து இயற்கையும் அற்றே’

பிறரெல்லாம் ‘எகர ஒகரத்து இயற்கையும்’ என்று பாடம் ஓதினர்.
சார்பெழுத்து மூன்றனுள் ஆய்தப் புள்ளி நீங்கலான ஏனைய குற்றியலிகரம்
குற்றியலுகரம் ஆகியவற்றின் இயல்பும் மெய்யெழுத்திற்குக் கூறிய அவ்வாறே
ஆம். அஃதாவது இவையும் அரைமாத்திரையளவு புள்ளி பெற்று ஒலிக்கும்
என்றவாறு. வரிவடிவின்கண் அடையாளம் செய்துகோடல் இவற்றிற்கும் ஒக்கும்.
(தொ. எ. 16 ச. பால.)