ஆ என்பது பசுவையும், ஆச்சாமரத்தையும் குறிக்கும் சொல். எனவே விலங்குப் பெயர் அல்லது மரப்பெயர் அடிப் படையில் தோன்றிய ஊராக வேண்டும். சங்கப் புலவர்களின் பெயர்களோடு இணைத்துக் கூறப்படுவ தால் நாம் அறியும் ஊர்ப் பெயர்களுள் அவூரும் ஓன்று. இதே பெயருடன் ஒன்றற்கு மேற்பட்ட ஊர்கள் உள்ளன.” கண்ணனார், காவிதிசள் சாதேவனார், கிழார், மூலங்கிழார், மூலங்கிழார் மகனார் பெருந்தலைச் சாத்தனார் ஆகியோர் இவ்வூரைச் சேர்ந்த புலவர்கள். நற்றிணையில் 265ஆம்பாடலும், அகநானூரற்றில் 13, 24, 156 159, 272, 224 ஆகிய பாடல்களும், புறநானூற்றில் 38, 40, 166, 177, 178, 196, 261, 301, 322 ஆகிய பாடல்களும் அப் புலவர்கள் பாடியவை.