ஆவினன்குடி

ஆவிக்கோமானின்‌ குடியினர்‌ வாழ்ந்த ஊர்‌ ஆவிகுடி என வழங்கப்பெற்று, நாளடைவில்‌ ஆவிநன்குடி என ஆகியிருக்க வேண்டும்‌. ஆவிக்‌ கோமானுக்குரிய நகர்‌ பொதினி என்று அகநானூற்‌றுப்‌ பாடல்கள்‌ தெரிவிக்கின்றன. ஆகவே அந்த பொதினி நகர்ப்‌ பகுதியே ஆவினன்‌ குடியாக இருக்க வேண்டும்‌ என்ற. கருத்தும்‌ சரியெனத்‌ தோன்றுகிறது. இப்பொதினியே காலப்போக்கில்‌ “பழனி” என்று மாறி வழங்கப்‌ பெறுகிறது என்பர்‌. இன்றுள்ள பழனி என்னும்‌ தலத்தின்‌ மலையடிவாரத்தில்‌ உள்ள கோயிலே ஆவினன்குடி என்னும்‌ ஊரைச்‌ சேர்ந்த பழைய கோயில்‌ என்றும்‌, மலை மீதுள்ள கோயில்‌ பிற்காலத்தது என்றும்‌ கூறப்படுகிறது. (பழனித்‌ தல வரலாறு பழனிதேவஸ்தான வெளியீடு. பக்‌.14) சித்தன்‌ வாழ்வு என்றும்‌ ஆவினன்குடி. முற்காலத்துப்‌ பெயர்‌ பெற்றிருந்தது எனத்‌ தெரிகிறது. சித்தன்‌ என்பது முருகக்‌ கடவு ளின்‌ பெயர்களுள்‌ ஒன்று.
“தாவில்‌ கொள்கை மடந்தையொடு சின்னாள்‌
ஆவினன்குடி யசைதலு முரியன்‌” (பத்துப்‌. திருமுருகு. 175 176)
முருகன்‌ நற்போர்‌ நெடுவேள்‌ ஆவி
அறுகோட்டு யானைப்‌ பொதினி ஆங்கண்‌” (அகம்‌, 1:3 4)
முழவு உறழ்‌ இணிதோள்‌ நெடுவேள்‌ ஆவி
பொன்னுடை நெடுநகர்ப்‌ பொதினி அன்ன நின்‌ (௸ 617 15 16)