என் ஆவடு தண்டுறை’ எனவும் அழைக்கப்பெறும் இவ்விடம் இன்று திருவாவடுதுறை எனப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டத் தில் உள்ள இவ்வூர்ப்பெயர் கோயில் தொடர்பால் ஏற்பட்டது எனத் தோன்றுகிறது. துறை, தண்டுறை போன்றன நீர்த்துறையைக் குறிக்க, துறையில் அமைந்துள்ள கோயிலால் இப்பெயர் வந்திருக்கலாம். அம்பிகை வழிபட்ட தலம்’ எனவும், இதனைச் சுட்டுகின்றனர் எனவே இதனை நோக்க செழிப்பான பகுதி ஆகையால் பசுக்கள் நிறைந்திருக்கலாம். இவை நீர் அருந்தும் துறை என்ற நிலையில் ஆ அருந்தும் துறை பெயர் ஆவடு துறை என மாற்றம் பெற்றிருக்குமோ என்ற எண்ணமும் ஏற்படுகின்றது. திருமூல நாயனாருடன் இத்தலம் தொடர்புடைய அமையும் நிலையும் 2 ஆவோடு இவ்வூரைத் தொடர்புபடுத்த ஏதுவாகிறது. ஆவடுதுறை கோயில் பற்றியுரைக்கும் நிலையில் இது கோயில் பெயர் என்பதும், சாத்தனூர் ஊர்ப் பெயர் என்பதும் தெரிய வருகிறது திருமூலர் பிறந்த இடமாகச் சுட்டப்படும் நிலையில் சாத்தனூர் அமைகிறது. இன்றும் சாத்த னூர் என்ற பெயருடன் அமையும் ஊர் காணப்படுகின்றது. இரண்டும் ஒன்றா என்பதும் ஆய்வுக்குரியது. தாக
குடிமன்னு சாத்தனூர் கோக்குலம் மேய்ப்போன் நம்பி -திருத் – 36
அந்தணர் தம் சாத்தனூர் ஆமேய்ப்பார் குடி தோன்றி
முந்தை முறை நிரை மேய்ப்பார் பெரிய – திருமூல -11