‘தூங்கு கையால் ஓங்குநடைய, உறழ் மணியால் உயர்மருப்பின’ (புற.22)‘பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன், பெண்டகை யால் பேரமர்க்கட்டு’ (கு. 1083)என்புழி ஆல்உருபு உடனிகழ்வதாக வேற்றுமை செய்தது. (கையோடு,மணியோடு, பெண்தகையோடு – என்பன பொருள்.) [ ஆன் உருபோடு அபேதமாக ஆலுருபு ஈண்டுக் கொள்ளப் பட்டது. ] (நன். 297 சங்.)