திருநாவுக்கரசர் பாடல் பெற்ற இத்தலம் இடைக்காலத்திலேயே தெரியவருகிறது. தாவரப்பெயர் கொண்டு பெயர் வைத்தலில் ஆல் மரமும் தமிழகத்தில் மரபாக வழங்கிய ஒன்று என்பதைப் பண்டு தொட்டே ஆலங்குடி, ஆலத்தூர் போன்ற பெயர்கள் சுட்டுவதனைப் போன்று ஆலங்காடும் ஆலம் பொழிலும் சுட்டுவதை இங்கு காண்கின்றோம். அணிதிரு ஆலம் பொழில் ( பெரிய திருஞா – 351 ) என்று சேக்கிழாரால் போற்றப்படும் இத்தலம் இன்று தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ளது.