ஆலத்தூர்‌

ஆலத்தூர்‌ கிழார்‌ பாடியனவாக உள்ள சங்க இலக்கியப்‌ பாடல்கள்‌ மூலம்‌ ஆலத்தூர்‌ என்ற ஊர்ப்பெயர்‌ நமக்குக்‌ கிடைக்‌ கப்‌ பெற்றுள்ளது. இப்பெயருடன்‌ ஒன்றிற்கு மேற்பட்ட ஊர்கள்‌ இருப்பதாகத்‌ தெரிகிறது. தென்‌ஆர்காடு மாவட்டத்தில்‌ மரக்காணம்‌ செல்லும்‌ வழியில்‌ ஆலத்தூர்‌ என்ற பெயருடன்‌ ஓர்‌ ஊர்‌ உள்ளது. குறுந்தொகையில்‌ 112, 350 ஆகிய பாடல்களும்‌, புறநானூற்‌ நில்‌ 34, 36, 69, 225 ஆகிய பாடல்களும்‌: ஆலத்தூர்கிழார்‌ பாடியவை.