வங்கனார் என்ற சங்கப் புலவர் பெயருடன் இணைத்து ஆலங்குடி. வங்கனார் என வழங்கப் பெற்றுள்ளதால் “ஆலங்குடி.” என்.ற ஊர்ப்பெயரை நாம் அறிகிறோம். தஞ்சாவூர் மாவட்டத்தில் கும்பகோணத்திலிருந்து ஒன்பதாவது மைலில் ஆலங்குடி என்னும் பெயருடன் ஒரு சிற்றூர் உள்ளது. இதே பெயருடன் ஒன்றிற்கு மேற்பட்ட ஊர்கள் இருப்பதாகத் தெரிகிறது. சங்க இலக்கியத்தில் குறிக்கப் பெற்ற ஆலங்குடி எது என்று அறிய இயலவில்லை. நற்றிணையில் 230, 330, 400 ஆகிய பாடல்களும், குறுந்தொகையில் 8, 45 ஆகிய பாடல்களும், அகநானூற்றில் 306 ஆம் பாடலும் புறநானூற் றில் 319 ஆம் பாடலும் ஆலங்குடி வங்கனரர் பாடியவை. ஒன்பதாம் நூற்றாண்டின் இறுதியில் ஆட்சி புரிந்த முதலாம் இராசராசனின் கல்வெட்டிலும் “ஆலங்குடி” என்ற ஊர்ப் பெயர் காணப்படுகின்றது.