ஆலங்கானம்‌

ஆலங்கானம்‌ என்ற இவ்வூர்ப்பெயர்‌ மதுரைக்‌ காஞ்சி, அகநானூறு, புறநானூறு ஆகிய சங்க இலக்கங்களில்‌ இடம்‌ பெற்‌றுள்ளது. ஆலங்கானம்‌ என்றும்‌ தலையாலங்கானம்‌.. என்றும்‌ குறிக்கப்பெற்றுள்ளது.ஊர்களின்‌ அமைப்பு கருதி தலை, இடை, கடை என்ற முன்‌ ஒட்டுகளில்‌ ஒன்று ஊர்ப்பெயர்களோடு இணைத்துக்‌ கூறும்‌ முறையையொட்டி ஆலங்கானம்‌ என்ற ஊர்ப்பெயர்களோடு குலை என்ற அடையடன்‌ தலையானங்கானம்‌ என வழங்கப்‌ பெற்றுள்ளது. சங்க இலக்கியங்களில்‌ குறிக்கப்பபெற்ற ஆலங்கானம்‌ அல்லது தலையாலங்கானம்‌ (தலையாலங்கானம்‌ என்ற பெயர்‌ தலை யாலங்காடு எனப்பெயர்‌ பெற்றிருந்ததாதத்‌ தேவாரத்தால்‌ (கி.பி. ஏமாம்‌ நூற்றாண்டு) தெரிகிறது.பாண்டியன்‌ நெடுஞ்‌ செழியன்‌ தன்னை இளையன்‌ என எண்ணி இஃழ்ந்து தன்‌ மீது படையெடுத்த சேர சோழர்‌, வேளிர்‌ ஐவர்‌ ஆக எழுவரைப்‌ பொருது வென்ற இடம்‌ ஆகும்‌. இப்‌போரில்‌ சேர சோழர்கள்‌ கொல்லப்பட்டனர்‌. என்றும்‌ தெரிகிறது. பெற்ற வெற்றியின்‌ காரணமாகத்‌ தலையாலங்கானத்துச்‌ செருவென்ற நெநடுஞ்‌ செழியன்‌ எனப்பட்டான்‌. (அகம்‌, 36, 116, 175, 209; புறம்‌. 371, 372.) பராந்தக வீர நாராயணனின்‌ தளவாய்புரச்‌ செப்பேட்டில்‌ “ஆலங்கானம்‌” என்றே குறிக்கப்பெற்றிருப்பதால்‌ கி.பி. ஒன்பதாம்‌ நூற்றாண்டிலும்‌ சங்ககாலப்பெயர்‌ எவ்வித மாறுபாடுமின்றி வழங்கியதாகத்தெரிகிறது. பெருங்கதையிலும்‌ ஆலங்கானம்‌ என்னும்‌ ஊர்ப்பெயர்‌ இடம்‌ பெற்றுள்ளது. ஆனால்‌ இது சங்க இலக்கியங்களால்‌ குறிக்கப்‌ பெறும்தமிழ்நாட்டு ஆலங்கானம்‌ அன்று. பெருங்கதையில்‌ இரண்டு இடங்கள்‌ குறிக்கப்பெற்றுள்ளன ஒன்று விபுலகிரியின்‌ பக்கத்தில்‌ மிருகாவதியின்‌ தந்தை தவஞ்செய்து கொண்டிருந்த இடம்‌. மற்றொன்று பூக்கொய்தற்கு வந்த பத்திராபதி என்னும்‌ “தெய்வ மகள்‌ யானையின்‌ சேர்க்கையைக்‌ கண்டு மனம்‌ வேறுபட்டுப்‌ பெண்‌ யானையாகப்‌ பிறக்கும்படி குபேரனால்‌ சாபம்‌ பெற்ற இடம்‌. இது விந்த மலையின்‌ பக்கத்தே நருமதையாற்றங்‌கரையிலுள்ளது.
“காலென்னக்‌ கடிதுராய்‌
நரடுகெட எரி பரப்பி
ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்து” (பத்துப்‌. மதுரைக்‌. 125 127)
…………..செரு இறந்து
ஆலங்கானத்து அஞ்சுவர இறுத்த
வேல்‌ கெழுதானைச்‌ செழியன்‌ பாசறை
உறைகழி வாளின்‌ மின்னி……” (நற்‌. 3876 9)
கொய்‌ சுவல்‌ புரவிக்‌ கொடித்தேர்ச்‌ செழியன்‌
ஆலங்கானத்து அகன்தலை சிவப்ப” (அகம்‌, 36:13 14)
கால்‌ இயல்‌ நெடுந்தேர்க்‌ கைவண்‌ செழியன்‌
ஆலங்கானத்து அமர்‌ கடந்து உயர்ந்த
வேலினும்‌ பல்‌ ஊழ்‌ மின்னி……” (௸. 175:10 12)
“எழுவுறழ்‌ திணிதோள்‌ இயல்தேர்ச்‌ செழியன்‌
நேரா எழுவர்‌ அடிப்படக்‌ கிடந்த
ஆலங்கானத்து ஆர்ப்பினும்‌ பெரிதே. (ஷே 2094 6)
“இமிழ்‌ கடல்‌ வளைஇய ஈண்டு அகன்‌ கிடக்கை
தமிழ்தலை மயங்கிய தலையாலங்‌ கானத்து
மன்‌உயிர்ப்‌ பன்மையும்‌ கூற்றத்து ஒருமையும்‌.
நின்னொடு தூக்கிய வென்‌ வேற்‌ செழிய” (புறம்‌. 19:1 4)
“ஞாலம்‌ நெளிய ஈண்டிய வியன்படை
ஆலங்கானத்து அமர்‌ கடந்து அட்ட” (ஷே 23:15 16)
“விபுலமென்னும் வியன்பெருங்‌ குன்றத்து
அருவரை யருகர்‌ ஆய்நலங்‌ கவினிய
ஆலங்கானத்து அணியொடு பொலிந்த
ஞாலங்‌ காவல்‌ நஞ்சென நீக்‌கி”… (பெருங்‌. இலாவாண அவலத்‌ 55 58)
“பல்வளைப்‌ பணைத்தோள்‌ பத்திராபதி யெனும்‌
மெல்லியல்‌ தன்னை வேந்தன்விடுக்க அப்‌
பணியொடு சென்று பனிமலர்‌ பொதுளிய
ஆலங்கானத்து ஆற்றயன்‌ மருங்கின்‌” (பெருங்‌. நரவாண இயக்கன்‌ 62 65)