இன்று செங்கற்பட்டு மாவட்டத்தில் காணப்படும் ஆலங் காடு, திருவாலங்காடு என்று அழைக்கப்பெறுகிறது பெயரிலேயே ஊர்ப்பெயர்க் காரணத்தை உள்ளடக்கிய இவ்வூர் பழையனூர் பக்கத்தில் இன்றும் உள்ளதைக் காண ? இலக்கியச் சான்றுகள் உரைக்கும் இதனைப் பற்றிய விளக்கம் உணர ஏதுவாகின்றது. இதனைப் பழனமூதூர் நிலவிய ஆலங்காடு ( பெரிய காரைக் -61 ) என்றும் பழையனூர் மேய அத்தா ஆலங்காடா ( சுந்- பதி 52) என்றும் சுட்டுகின்றனர். எனவே பழையனூரின் ஒரு பகுதியாக ஆலங்காடு இருந்தது என்பது தெரிகிறது. பின்னர் இங்குள்ள சிவன் கோயில் சிறப்புற்று, இத்தலம் தனியே திருவாலங்காடு எனச் சிறப்பு பெறும் பெருமை பெற்றது என்பதை யுணரக் கூடுகின் றது. காரைக்காலம் மையாரால் முதலில் சிறப்புற்ற இத்தலம், பின்னர் மேலும் பலரால் சிறப்பிக்கப்படும் பெருமை பெற்றது என்பதையும் காண்கின்றோம். திருவாலங்காட்டு மூத்த திருப் பதிகத்தையே காரைக்காலம்மையார் தந்து இங்குள்ள இறைச் சிறப்பை வெளிப்படுத்தக் காணலாம்.