ஆறைமேற்றளி

சேக்கிழார் ஏயர்கோன் நாயனார் சென்ற திருத்தலங்களுள் ஒன்றாக திரு ஆறை மேற்றளியைக் குறிப்பிடுகின்றார்.
தேடும் இருவர் காண்பரியார் திருவாறை மேற்றளி சென்றார் ( 43 )
செம்பொன் மேருச் சிலை வளைத்த சிவனார்
ஆறை மேற்றளியில்
நம்பர் பாதம் பணிந்து இறைஞ்சி ( 94)
என்ற பாடலடிகள் ஆறை மேற்றளியில் குடிகொண்ட சிவன் பற்றி காட்டுகின்றன. ஆறை என்பது கோட்டை என்ற பொருளில் தளி கோயிலைச் சுட்டும் நிலையில் கோட்டை போன்ற கோயில் என்ற பொருளில் கோயில் பெயர் ஊர்ப்பெயராகி இருக்கலாம். அல்லது அறை (பாறை ) மேல் கோயில் என்ற பொருளில் அறை மேற்றளி, ஆறை மேற்றளியாகி இருக்கலாம்.