ஆறு என்பது எண்ணுப்பெயரன்று. அது வரையறைப் பண்புப் பெயர். அஃதுஆகுபெயராய் ஆறுஅங்கத்தை உணர்த்தி நின்றது.‘இனைத்தெனக் கிளக்கும் எண்ணுக்குறிப்பெயர்’ ஆகிய ஆறு என்பது ஆகுபெயர் ஆகாமலேயே பொருளை உணர்த்தும்ஆற்றலுடையது. தொல்காப்பியனார்க்கு எண்ணுப்பெயர் ஆகுபெயராய் எண்ணப்பட்டபொருளை உணர்த்த வேண்டும் என்ற கருத்தில்லை. (தொ. சொ. 119 நச்.உரை)