‘ஆர்’ ‘பீர்’ மரப்பெயர் புணருமாறு

ஆர் என்ற மரப்பெயர் வருமொழி வன்கணத்தொடு புணரும் வழி இடையே
மெல்லெழுத்துப்பேறும், சிறுபான்மை அம்முச் சாரியையும்
அத்துச்சாரியையும் எய்தும்.
எ-டு : ஆர் + கோடு = ஆர்ங்கோடு; – ஆர் + கண்ணி = ஆரங் கண்ணி
(அம்); பீர் + அலர் = பீரத்தலர் (அத்து) (தொ. எ. 363 நச்.)