ஆர்வ நன் மொழி ஆய்’ எனச் சிறுபாணாற்றுப் படையில் ஆய் என்ற கடையேழு வள்ளலுள் ஒருவனைக் காண்கின் றோம். மேலும், ஆய் என்பது இடையர்களையும் குறிக்கும். எனவே ஆயர்கள் வாழ்ந்த இடம் ஆய்ப்பாடி என்பது பொருத்தமாக அமைகிறது. நாலாயிர திவ்விய பிரபந்தத்தில் ஆழ்வார்கள் இதனைப் பாடுகின்றனர்.